பாடல் – பணம் பந்தியிலே
திரைப்படம் – பணம் பந்தியிலே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை பிழைக்கும் மனிதனில்லை
ஒண்ணும் தெரிய ஆளானாலும் பணம் இருந்தாலே
அவனை உயர்த்தி பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
ஆளை ஆளு புகழ்வதேல்லாம் பணத்துக்காகத்தான்
பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உன்னைத்தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை * 2
இதை பார்த்து எண்ணி பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
உன்னால் உயர்ந்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு * 2
நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
திரைப்படம் – பணம் பந்தியிலே
பாடல் – பணம் பந்தியிலே
இசை – திரு.கே.வி.மகாதேவன்
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்
வெளியீடு – 7 நவம்பர் 1961

இன்றையப் பாடல்களையும் விட பழைய பாடல்வரிகள் அப்படியே மனதில் பதிந்து விடுகின்றன.
மகிழ்ச்சி!
நன்றி நண்பரே. நீங்கள் கூறுவது உண்மையே. இன்றைய பாடல்கள் சில மட்டுமே கேட்க இனிமையாக உள்ளன. அவற்றுள் கருத்துள்ள பாடல்களை தேடுதல் கடினமே