தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதிசொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
பாடல் – ஆறு மனமே ஆறு
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்
Yenda paatu romba nanna namba vaikai sollugiradu.
brilliant song da….there is another song called amaidhiyaana nadhiyinilae odam from the same movie….
@ வித்யா மற்றும் அருண்: பின்னூட்டங்ளுக்கு நன்றி. 🙂
@ அருண்: ஆம், மிக நல்ல பாடல் அதுவும். கவியரசர் புலமைக்கு சான்றும் வேண்டுமோ ?
“ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி”
அரிய பெரிய தத்துவங்களை Assaultaga சொல்வது கவியரசருக்கு பிள்ளை விளையாட்டு (child’s play :D). அருமை! நான் edulix-இல் இருந்து இங்கே வந்தேன்.
உங்கள் வலைப்பூ தொடர்ந்து மணம் பரப்பட்டும்.
வீரவேல் ! வெற்றி வேல் !
தங்களது பதிவுகள் சுவையாக இருக்கின்றன.
தொடர்ந்து எழுதுங்கள்.
வந்தே மாதரம் !
பழைய பாடல்களைக் கேட்பதிலே ஒரு சுவை இருக்கத்தான் செய்கின்றது!